வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் எச்சரிக்கை.!

வெப்பமான வானிலை இன்றும் அதிகரிக்கலாம் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் 6 மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் வெப்பநிலை, மனித உடலால் உணரப்படும் “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு நீரை அருந்துமாறும் , முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்