காட்டு யானைகளுடன் மோதி ஐந்து யானைகள் உயிரிழப்பு தொடருந்துபோக்குவரத்து பாதிப்பு.

கல்லோயாவில் ரயில் விபத்து - 5 யானைகள் பலி.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்து (19 ) நேற்றிரவு 11.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன.

விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்