கணவனால் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 23 வயது இளம் தாய் கொலை இறக்காமம் குடுவில் பகுதியில் சம்பவம்.!!

கடந்த சில தினங்களின் முன்பே வெளிநாட்டிலிருந்து வந்த 23 வயதான மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த கணவன் இறக்காமம் பொலிஸ் பிரிவில் சம்பவம்.

 அம்பாறை இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட குடுவில் அரபா நகர் பகுதியில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தாக்கல் கைகலப்பாக மாறி  கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் 23 வயது உடைய இளம் தாய் என்றும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பே வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்று வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலைச்  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைளை இறக்காமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்