சிவப்பு எச்சரிக்கை சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வாண் கதவுகள் இன்று காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.
அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் .
நேற்றிரவு மற்றும் தற்போது வரை அம்பாறையில் கடும் மழை பெய்து வருவதால் சேனநாயக்க சமுத்திரத்துடன் கூடிய பிரதான நீர்ப்பாசன குளங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
சேனநாயக்க சமுத்திர குளத்தின் 5 அவசர வாண் கதவுகள் 2025.01.19 இன்று காலை 08.00 மணிக்கு 6 அங்குலம் திறக்கப்படும். மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் தயார்நிலைக்காக கீழ்நிலை தாழ்வான பகுதி மக்களுக்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தற்போது பெய்து வரும் மழையால் சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் தற்போது 106.6 அடி ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று, 19.01.2025ம் திகதி காலை 8.00 மணிக்கு 5 வான் கதவுகளில் இருந்து 6 அங்குல அளவில் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம தெரிவித்துள்ளார்
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுமார் 12 அங்குலம் அல்லது ஒரு அடி திறக்க வேண்டி ஏற்படும் . அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க தயாராக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்
மேலும் இதுடையவாக போலீசார் மற்றும் முப்படையினருடன் கலந்து ஆலோசித்து வெள்ளம் சூழக்கூடிய சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது
சிந்தக்க அபேவிக்ரம
அரசாங்க அதிபர்
அம்பாரை
பொது மக்களுக்கு விடுக்கப்படும் சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வாண் கதவுகள் இன்று காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக