சற்றுமுன் செட்டிபாளையத்தில் விபத்து மகிழூரைச் சேர்ந்த இருவருக்கு காயம்..!!

சற்றுமுன் செட்டிபாளையத்தில் விபத்து  மகிழூரைச் சேர்ந்த இருவருக்கு காயம்.

மட்டடக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா நிறுவன தயாரிப்பான சிறியரக வட்டா ( Mahindra bolero) வாகனமும் செட்டிபாளையம் பகுதியில் வைத்து முன் பின் மோதிக்கொண்டுள்ளது.


இவ் விபத்து இடம்பெற்ற சமயம் மோட்டார்சைக்கிளில் இரண்டு இளைஞர்கள்  பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞனின் கை உட்பட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு இளைஞனுக்கும் சிறியளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.


முன்னால் சென்ற மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த மகேந்திரா நிறுவன தயாரிப்பான சிறியரக வட்டா முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. இந்த சிறியரக வட்டா மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர்களுடையது என சொல்லப்படுகிற அதே வேளை மோட்டார்சைக்கிளில் பயணித்து காயமடைந்த இளைஞர்கள் மகிழூர் பகுதியைச்  சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்