முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹரீஸ் இடைநிறுத்தம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியை கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்தமையே காரணம்.

கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன் கட்சியை கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளக்கமளிப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்