இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதான வீதி 9ஆம் கட்டை பகுதியில் கணரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச மலையடி கிராமத்தினை சேர்ந்த ஜே.எம்.எம். இபாம் என்ற இளைஞரே குறித்த விபத்தின் போது உயிர் இழந்துள்ளார்.
வாகனத்தினுடைய சாரதி இறக்காமம் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக