நாளை (05 ) குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்.!!

நாளை (05 ) குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  பிரகடனம்.!!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில்  பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை.உத்தியோகபூர்வமாக  அங்குரார்ப்பணம்  செய்தல் நிகழ்வு நாளை (05) வெள்ளிக்கிழமை குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் வெகுமிர்சையாக நடைபெற உள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி j.j முரளிதரன் மற்றும் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் , தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

பாதுகாக்கப்பட வேண்டிய குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழலை கட்டியெடுப்ப முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந் நிகழ்விற்கு  கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள், ஆலய ,சங்க பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்கள் அனைவரையும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : மத்திய சுற்றாடல் அதிகார சபை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்