மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்..!!

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  பிரகடனம்.
மட்டக்களப்பு நிருபர் சோபிதன்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை.உத்தியோகபூர்வமாக  அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை (05.04.2024) குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில்  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது குருக்கள்மடம் ஏத்தாழைக்குளத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உடனடி கள விஜயத்தினை மேற்கொண்டு , ஏத்தாலைக்குளம் சார்ந்த சூழலை பார்வையிட்டனர்.

 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்