பாராளுமன்ற உறுப்பினர்
இன்றைய நாளில் கட்டாரில் வாழ்கின்ற ஏறாவூர் சகோதரர்களை இணைத்து Eravur Association of Qatar (EAQ) அமைப்பானது ஒன்று கூடல் ஒன்றினை முன்னெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதுடன் இதற்காக வாழ்த்தினை பகிர்வதன் மூலமாகவும் நிகழ்வின் இலக்கு நிறைவேற பிரார்த்திப்பதிலும் நானும் ஒரு ஏறாவூரை சேர்ந்தவனாக பெருமிதம் அடைகிறேன்.
கட்டாரில் உள்ள பர்வா பூங்காவில் இன்று பிற்பகல் ஒரு சகோதரத்துவ வாஞ்சை உணர்வுடன் ஒற்றுமைப்பட்ட ஏறாவூர் மண்ணின் உறவுகளாக எவ்வித வேற்றுமைகளும் இல்லாது ஒன்று கூடும் இன்றைய தருணம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்,
தனதும் தன் குடும்ப உறவுகளின் கனவுகளை நனவாக்க வேண்டும் என கவலைகளை சுமந்தவர்களாக சென்ற ஒவ்வொருவருக்கும் அங்கு உள்ள சிறு ஆறுதல் - மகிழ்ச்சி என்பது இவ்வாறான ஒன்று கூடல் மூலமாகவே சாத்தியப்பட முடியும்.
தேசம் கடந்து சென்றாலும் எம்மவர்கள் தேசப்பற்று மிக்கவர்களாகவும் , தாய் நாட்டையும் தாய் மண்ணையும் சமூகத்தையும் என்றும் நேசிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர் , எந்த ஒரு அனர்த்த நேரத்திலும் பொது நலன் கருதி மனிதாபிமான உணர்வுடன் முந்திக் கொண்டு செயலாற்றுவது உங்களைப் போன்ற வெளிநாட்டு உறவுகளே என்றால் மிகையாகாது -
அந்த வகையில் EAQ அமைப்பினரின் நீண்டகால செயற்பாடுகளை நான் நன்கு அறிந்தவன் எனும் வகையில் இன்றைய நிகழ்விற்கு முன்னெடுக்கும் ஒழுங்கமைப்பானது ஒரு உயரிய நோக்கின் அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குடையாக்கி வினைத்திறன் மிக்க பணிகளை முன்னெடுக்க எடுக்கும் ஒரு உயரிய முயற்சியாகவும்,
எங்களுக்குள் ஒற்றுமை, சகோதரத்துவம் விட்டு கொடுப்பு , புரிந்துணர்வு என்பவற்றை மேலோங்க செய்யும் ஒன்றாகவும் , குடும்ப உறவுகளை விட்டு தொலை தூரம் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு உடன்பிறப்பு அருகில் இருப்பது போன்று தோள் கொடுக்கும் நம்பிக்கையை பரஸ்பரம் எங்களுக்குள் கட்டி எழுப்பும் ஒன்றாகவும் இந்த நிகழ்வு அமையும் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கும் வகையில் கலை, பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர் நிகழ்வுகள் என ஒரு ஜனரஞ்சக அடிப்படையில் இன்றைய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பது என்ற தகவலானது உண்மையில் இங்குள்ள எமக்கும் ஒரு மன மகிழ்வான உணர்வை தோற்றுவிக்கின்றது .
அந்த வகையில் ஒரு பொதுவான உயர்வான நோக்கின் அடிப்படையில் எங்களுக்குள் ஒற்றுமைப்பட்டவர்களாக இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ள நிகழ்விற்கு செல்லும் அத்தனை உறவுகளையும் உளமார வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை கடந்த காலங்களில் அமைப்பு ரீதியாகவோ தனி நபர் அடிப்படையிலோ உங்களால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மற்றும் கல்வி சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை விடவும் மேன்மையானதும் வினைத்திறன் கொண்டதுமான பணிகளை முன்னெடுக்கும் வீரியத்தையும் வளங்களையும் இந்த ஒற்றுமை உங்கள் அனைவர் மத்தியிலும் கொண்டு வர வேண்டும் எனவும் உங்கள் அத்தனை பேரின் தேக ஆரோக்கியத்திற்காகவும் இவ்விடத்தில் இறைவனை வேண்டுகிறேன்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வை முன்னெடுக்கும் EAQ அமைப்பினருக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துரையிடுக