(எஸ்.எம்.அறூஸ்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் பெரும் முயற்சியினால் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினூடாக பொத்துவில் பிரதேசத்திற்கு குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பொத்துவில் காரியாலய பொறுப்பதிகாரி அஸீஸ் அவர்களின் தலைமையில் ஹெட ஓயா,நீர் உள்ளீர்ப்பு உந்து நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இங்கு, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அக்கறைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம். முஷாஜித், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பொறியலாளர்கள்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளையின் தலைவர் முகைதீன் பாவா மௌலவி, பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் வை.எல்.நியாஸ்,பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மூவின மதத்தலைவர்கள்,கமக்கார அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொத்துவில் பிரதேசத்தில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் 5 கிலோ மீற்றர் அளவிற்கான குழாய்கள் பதிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 3 கிலோ மீற்றருக்கான குழாய் பதிக்கும் உடனடி செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக புரையோடிப் போய்க் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளையும், தேவைப்பாடுகளையும் நிவர்த்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் தொடர்ச்சியாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் குடிநீர் வழங்கல் திட்டமும் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மூவினங்களையும் சேர்ந்த மதகுருமார்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் இப்பாரிய பணியினை பாராட்டியதுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.











கருத்துரையிடுக