பல்கலைக்கழக அனுமதி மாணவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி மூலம் விசேட அறிவிப்பு

2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம், பாடநெறி தொடர்பில் இன்று குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு 84,176 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதுடன், இந்த வருடம் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்