வெளிவந்திருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனையாக 23 மாணவர்கள் 9A பெறுபேறுகளைப் பெற்றதை பாராட்டு முகமாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினால் பாராட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் வைத்திய கலாநிதி சனூஸ் காரியப்பர் மற்றும் அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாடசாலை அதிபர் MI. ஜாபீர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தனர். இந்நிகழ்வில் குறித்த பகுதிக்கு பகுதி தலைவராக செயற்பட்ட முன்னாள் ஆசிரியர் சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் மற்றும் இரு மொழி கற்கை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் MFMR. ஹாதீம் சார்பாக பிரதி ஒருங்கிணைப்பாளர் முஸ்தன்சீர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக