சம்பளம் மூன்றில் இரண்டு பங்கினை உடனே வழங்கு ஆசிரியர்கள் போராட்டம்.!!

மூதூர் பிரதேசத்தில் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டின் தீர்க்கும் வகையில் மூன்றில் இரண்டு பங்கினை உடனே வழங்கு ,பாடசாலை செலவுச் சுமையை பெற்றோருக்கு திணிக்காதே, கல்விக்கு 6 % வீத ஒதுக்கீடு செய், கல்வியை விற்பதை நிறுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர் , ஆசிரியர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்