இன்று நள்ளிரவு (01) முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்.!!

இன்று நள்ளிரவு (01) முதல் எரிபொருள் விலைகள் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில்  எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலை விபரம்.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 346/= ரூபா

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 426/= ரூபா

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அதன் புதிய விலை 329/= ரூபா

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 434/= ரூபா
மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

அதன் புதிய விலை 247/= ரூபாவாகும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்