சற்று முன் கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் வேன் விபத்து - வேனின் சாரதி மரணம்

சற்று முன் கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் வேன் விபத்து - வேனின் சாரதி மரணம் 

கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் அதுகலயை அண்மித்த பகுதியில் கட்டுவன்விலயைச்சேர்ந்த குடும்பத்தினர் பயனித்த சிறிய ரக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி காட்டுப்பகுதியினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தைக்கேள்வியுற்ற பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்குச்சென்று வேனில் சிக்குண்டவர்களை மீட்டு வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வேனின் சாரதியும் உரிமையாளருமான சின்ன சேனபுரையைச் சேர்ன்ய நாகூர் ஹாஜியாரின் மகன் நளீபர் என்பவர் மரணமடைந்துள்ளார். 

விபத்துக்கான காரணம் பற்றிய தகவல்கள் எதுவும்  இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரனைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்