ஓட்டமாவடி தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

ஓட்டமாவடி தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டது.ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருக்கும் பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பைறூஸின் உறுப்புரிமையை நீக்கி இருந்தது. இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் பைறூஸ் இடைக்கால தடையுத்தரவு வேண்டி வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில், இடைக்கால் தடையுத்தரவு வழங்கப்படாத நிலையில் வழக்கு டிஸம்பர் மாதம் 9 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்