மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பக்கச்சார்பான நிருவாகத்திற்கெதிரான தொடர் போராட்டம்.!!

கோறளை மத்திக்கு ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துங்கள் சட்டத்தரணி  ஹபீப் றிபான்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பக்கச்சார்பான நிருவாகத்திற்கெதிரான தொடர் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

கல்குடா சூரா கௌன்சில் (மஜ்லிஸ் ஷூரா சபை) ஏற்பாடு செய்திருக்கின்ற கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு ஆணைக்குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தக்கோரி, தீர்வு வேண்டிய தொடர் நாள் போராட்டத்தினை மேலும் வலுப்பெறச்செய்யும் நோக்கில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் சட்டதரணியுமான  ஹபீப் றிபான் கலந்து கொண்டார். 

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாரபட்சமின்றி தமது நிர்வாகக்கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கடந்த காலங்களில் குறித்த பிரதேச செயலகம் தொடர்பில் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டுமென சட்டத்தரணி  ஹபீப் றிபான் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் நேரடியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்