ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் மஹியங்கனை பொலிஸார் கைது9450 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 2750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று (3) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹியங்கனையின் தொடம்வத்தை மற்றும் சொரபொர பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடம்வத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் 5700 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் ரூ.4370 பணமும் கைப்பற்றப்பட்டதாகவும்
மற்ற சந்தேக நபரிடம் 2750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இரு சந்தேக நபர்களும் ஒரே குடும்பத்தின் சகோதரியை திருமணம் முடித்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற சந்தேக நபர் சொரபொர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவரிடம் 3750 மில்லிகிராம் ஹெராயின் ரண்டு பிடிக்கப்பட்ட தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி வசந்த கண்டேவத்தவின் ஆலோசனையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி. டபிள்யூ.டபிள்யூ.விஜேரத்ன தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர்களை இன்றைய தினம் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் மஹியங்கனை பொலிஸார் கைது.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
கருத்துரையிடுக