Update (29.06.2024)
ஹா ன் யூனூஸ் பகுதிகளில், காசாவில் இருந்து வெளியேறிய மக்களின் கூடாரங்களின் நிலைமை, மோசமான நிலையை தொட்டிருக்கும் இந்த தருணத்தில் உலகமே கை கட்டி பார்த்து கொண்டிருக்கின்றது .
ஹா ன் யூனூஸ் பகுதிகளில், காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் கூடாரங்க அமைத்து தங்கி வருகின்றனர் .
அங்கு பாரிய மழை பெய்து கொண்டிருக்கும் தருணத்தில் , தொற்று நோய்கள் ஏற்படக்கூடியக அபாயங்களும் காணப்படுகின்றன.
உண்ண உணவில்லை , குடிப்பதற்கு தண்ணீர் இல்லை , அடிப்படை சுகாதார மருத்துவவசதிகள் இல்லை , கூடாரங்களில் நிரம்பி உள்ள மழை நீரின் மேலேயே அந்த மக்கள் தூங்குகிறார்கள் . இதை எதையுமே தங்கி கொள்ள முடியாத நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
இன்று உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் , சில உதவிகள் , மருந்துகள் , உணவு உட்பட ஒரு நாளைக்கு, கூடியது 100 வண்டிகள் ரfபா எல்லை வழியாக அனுப்ப பட்டு கொண்டிருந்தது .
தங்களுடைய பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை
இந்த உணவு வண்டிகளை அனுப்பக் கூடாது என்று இஸ்ரேலியர்களில் ஒரு சாரார் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர் . இதனால் ஹான் யூனூஸ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான உணவும் தடை பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
ஐ . நா வின் உதவி மையம் சில உதவிகளை அம்மக்களுக்கு செய்து கொண்டு வந்தது . அந்த உதவி மையத்துக்கு அனுப்பப்படும் உதவிகளை கூட பல நாடுகள் நிறுத்து விட்டன . அரபு நாடுகள் இதில் எவ்வித உதவிகளையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதும் பலஸ்தீன, காசா மக்களுக்கு இருக்கும் இன்னும் நெருக்கடியாக மாறி உள்ளது .
இதேவேளை , ஹான் யூனூஸ் பகுதியில் கூடாரங்களில் தங்கி உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு துண்டு பிரசுரங்களை இஸ்ரேலிய படைகள் ஹெலிகொப்டர் வழியாக வீசிக் கொண்டிருக்கின்றன . அம்மக்களை வெளியேற சொல்வதற் கு முன்பே அப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள் . பொது மக்கள் வாழும் பகுதியிலே வெளிப்படையாக தாக்குதலை நடத்துகின்றது இஸ்ரேல்.
சிபா மருத்துவமனை , அல் குதூஸ் மருத்துவ மனைகள் முற்றாக அளிக்கப்பட்ட நிலையில் , ஹான் யூனூஸ் பகுதியில் இருக்ககூடியதான முக்கியமான மருத்துவமனையான நாசர் மருத்துவமனைக்கு வரக்கூடிய மருந்துகளை இஸ்ரேலிய படைகள் நிறுத்தி வைத்துள்ளார்கள் . இதேவேளை நாசர் மருத்துவமனையில் ஒட்ஸினனுக்கு தட்டுப்பாடு நிலவுதாகவும் அங்கிருக்ககூடிய செம்பரை சங்கம் அறிவித்திருக்கின்றது .
ஒட்டு மொத்தமாக உணவிலிருந்து மருந்துகள் வரை அனைத்து அடிப்படை தேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருக்ககும் நிலை ஏற்டபட்டுள்ளது .
இதனால் அடிப்படை தேவை வசதிகள் இல்லாமலேயே பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணித்து விடுவார்களோ என்கிற அச்ச நிலை தோன்றி உள்ளதாக தெரிய வருகின்றது .
இன்று ( 29.01) அல் ஜசீரா வெளியிட்டு இருக்க கூடிய மிக முக்கியமான செய்திகளில் ,
காசா மீது 2 மாதங்கள் தொடற்சியான யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சியை அமெரிக்காவின் CIA உள்ளிட்ட பல தரப்பினர் முயற்சித்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதில் எகிப்து , கத்தார் , அமெரிக்கா , இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து , 100 கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சு வார்த்தையை ஆரம்பித்து இருப்பதாக தெரிய வருகின்றது .
இரண்டு மாதங்கள் யுத்த நிறுத்தசாத்தியம் வருமாக இருந்தால் , அது தொடர்ந்து நீடிக்க கூடிய நிலையும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது . இதனால் இந்த 2 மாத யுத்த நிறுத்தம் வருவது என்பது மிக முக்கியமானதாக உள்ளது .
இருப்பினும் இது எந்தளவு சாத்தியமாக கூடும் எனபதும் கேள்விக்குறியாக உள்ளது . இதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவிக்குமா ? ஹமாஸ் அமைப்பு எந்தளவுக்கு இதற்கு உடன்படுவார்கள் என்ற கேள்விகளும் உள்ளன .
இருப்பினும் 2 மாத யுத்த நிறுத்தத்திற்கு நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறோம் என CIA தெரிவித்திருப்பதாக அல் ஜெஸீரா தெரிவித்திருக்கின்றது .
ஐ . நா வின் UNRWA இயக்கத்தை மொத்தமாக பாலத்ஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிற அறிவிப்பை இன்று (29.01) இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது .
வெளியேறாவிட்டால் அவர்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் அறிவித்திருக்கிறார்கள் . இதன் மூலம் U N R W A மீதான தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி இருப்பதாகவும் அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது .
கருத்துரையிடுக