25 வருடமாக முஸ்லிம் காங்கிரஸிக்காக தன்னையே அர்ப்பணித்து பல தியாகங்களை செய்த பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித்திற்கு நடக்கப் போவது என்ன?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதான ஒரு கதையாடல் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களுக்கும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம் பெற்று வந்ததாகவும் அறிய முடிந்தது.
இதே நிலையில்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையும் தொடர்ந்து கொண்டிருந்தது.
இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸிக்குள் முஷாரப் பிரவேசிப்பாராக இருந்தால் ஹரிஷ் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துக்கொள்ள மாட்டார் என்ற ஒரு கதையாடலும் இடம்பெற்று வந்தது.
இதற்கிடையில் ஹரிசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையும் திரைமறைவில் இடம்பெற்று கொண்டு வந்திருந்தது.
இப்போது இந்த விடயம் பூதாகரமாக மாறியுள்ளது.
அதன்படி முஸ்லிம் காங்கிரசுக்குள் முஷாரப்பை இணைத்துக் கொள்வதற்கான பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்களில் இருந்து அறிய முடிகிறது.
இதனை அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கும் ஹரிஸிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது.
இத்தோடு முடியும் என்றில்லை ஹரிஸையும் தாண்டி அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஒரு அபூர்வ விளக்கை ஏற்றி வைப்பதற்காக இன்னும் ஒரு அணி பொத்துவில் பிரதேசத்தில் இருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச மத்திய குழு மற்றும் முன்னாள் தவிசாளர் உட்பட அப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் பல ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் அறிய முடிகிறது.
இவ்வாறெல்லாம் இடம்பெருமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன் வசப்படுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் களின் முடிவுகள் எமக்கு பல விடையங்களை தெளிவு படுத்தியிருக்கிறது.
சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸிற்கு படுதோல்வியை கொடுத்திருக்கிறது.
அதேபோல் நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸிக்கு வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனையிலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கல்முனை,சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் உள்ளூராட்சி தேர்தல் நடக்கவில்லை நடந்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய தோல்வியை கண்டிருக்கும்.
குறிப்பாக கடந்த கால தேர்தல்களில் அம்பறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை தன்னகப் படுத்தியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் விஷேடமாக சம்மாந்துறை, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களின் பிரதேச சபைகள், நகர சபைகளை ஆட்சி அமைத்தும் இப்பிரதேசங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்பியும் வந்திருந்தது.
சொல்லப்போனால் அதில் விசேடமாக கல்முனை என்றால் ஹரிஸ், ஹரிஸ் என்றால் கல்முனை என்ற நிலையையே நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
இதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தல் பறைசாற்றியிருக்கிறது.
ஹரிஷ் முஸ்லிம் காங்கிரஸில் இல்லை கல்முனை மக்களும் முஸ்லிம் காங்கிரஸோடு இல்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல் மிகத் தெளிவாக சொல்லியிருந்தது.
முஸ்லிம் காங்கிரஸோடு சம்மாந்துறை இல்லை, கல்முனை இல்லை சாய்ந்தமருது இல்லை நிந்தவூர் இல்லை ஒலுவில்.பாலமுனை இல்லை அக்கரைப்பற்று இல்லை பொத்துவில் இல்லை இல்லவே இல்லை...!
இதை எப்படி நிரப்பிக் கொள்வது என்ற கேள்வியோடு முஸ்லிம் காங்கிரஸ் பெரும் சவால்களுக்கு மத்தியில் தனது பயணத்தை மீளக்கட்டியெழுப்ப ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில்தான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் ஒருபக்கம் தலைமைத்துவப் பிரச்சினை இன்னொரு பக்கம். முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினை அடுத்த பக்கம். அதாஉல்லாஹ் பிரச்சனை என்றெல்லாம் பிரச்சினைகள் தொடர்கிறது இன்னொரு திசையில் 20க்கு வாக்களித்தவர்கள் குறித்த பிரச்சினை, ஜனாஸா எரிக்கப்பட்ட காலத்தில் மொட்டுக்கு முட்டுக்கொடுத்தவர்களை கட்சிக்குள் இணைக்கக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுடைய அழுத்தம் இன்னொரு பக்கம் தேசியப்பட்டியல் பிரச்சினை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்கெல்லாம் எவ்வாறான முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதில்தான் அவரின் சாணக்கியம் பற்றி அறியாதவர்கள் அறியமுடியும்.
ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அண்மையில் ஒரு கதையைக் கேட்க முடிந்தது.
அதாவது அமையப்போகின்ற பிரதேச சபையினுடைய முதலாவது நாளன்று ஆட்சி அமைப்பதில் ரவூப் ஹக்கீம் சாணக்கியனா நான் சாணக்கியனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறிய வார்த்தை.
சொல்லால் வெல்லுமா?
செயலால் வெல்லுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
-நான் உங்கள் பொத்துவில் சியாத்-
கருத்துரையிடுக