பிரதேச சபைக்கான தேர்தல் இறக்காமத்தில் நேர்மையான அரசியலை முன்னெடுப்போம் - நெளபர் மெளலவி

பிரதேச சபைக்கான தேர்தல் இறக்காமத்தில் நேர்மையான அரசியலை முன்னெடுப்போம் - நெளபர் மெளலவி


இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் சுயெட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இறக்காமம் கல்வியாளர்களைக் கொண்ட ஒரு பிரதேசம் இங்கு மூன்று சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்

இப் பிரதேசத்தில் ஒரு சிலரது அரசியல் ரீதியான செயற்பாடுகள் நம் பிரதேசத்தின் பினனடைவுகளுக்கு பெரும் தடைகளாக மாறி உள்ளது.

சில அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் கொந்தராத்துக்கள் சுய நலங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடுதான் அரசியல் களத்தில் நிற்கின்றனர்.

அவர்கள் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளில் இருந்து தனிநபர் முக்கியத்துவத்திற்கு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் உரிமை. பாதுகாப்பு. சமூக அபிவிருத்தி போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அதன் அடிப்படையில் நேர்மையான ஒழுக்கமான வேட்பாளர்களை எமது கட்சி இறக்காமம் பிரதேசத்தில் களமிறக்கியுள்ளது.

நமது பிரதேசத்தின்  கல்வி . கலாச்சார. விழுமியங்கள் ஒங்கீ மிளீர வேண்டும். தனிநபர் கொந்தராத்து அரசியல் அகற்றப்பட வேண்டும். புதிய தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுவே எனதும்  எமது கட்சியின் நிலைப்பாடாகும்

அதற்காகவே நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

மாற்றத்திற்கான பயணத்தில்  நேர்மையாக உங்களை நான் அழைக்கின்றேன்.
வாருங்கள்  ஒன்றிணைந்து நம் பிரதேசத்தை கட்டியெழுப்புவோம் நேர்மையான அரசியலை முன்னெடுப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்