ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு அலிஸாஹிர் மௌலானா போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு.!!
பாலக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களால் ரூபா 300,000/- நிதி ஒதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்கள் கையளிப்பு.
முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களின் எண்ணற்ற பணிகளில் கல்குடா மண்ணின் கல்வித்துறை தொடர்ச்சியான அபிவிருத்திகளை சந்தித்து வருகிறது.
அதனடிப்படையில் பாலக்காட்டு வெட்டை வித்தியாலயத்திற்கான அவசியத் தேவையாகவிருந்த போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் தளபாட வசதிகளுக்காக முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களால் கடந்த ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் 300,000/- ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த (24.02) திங்கள் அன்று பாடசாலையின் அதிபர் ST. ஜஃபர் கான் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் கடந்த கால அபிவிருத்தி முன்னெடுப்புகளில் இப்பாடசாலைக்கான சிறுவர் பூங்கா முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு அலிஸாஹிர் மௌலானா போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக