கோட்டைக் கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். ஆபத்தான நிலையில் வயதான பெண் இருப்பதாக தெரிக்கப்படுகின்றது. வேன்
சாரதி தப்பியோட்டம்.
இச்சம்பவம் சற்று நேரத்திற்கு முன்பு நடைபெறவுள்ளது.
மட்டு கல்முனை பிரதான வீதி வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக் கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக் கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித் தள்ளியுள்ளது . இதனால் அப் பெண்மணி படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோட்டைக் கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.




கருத்துரையிடுக