(ஏறாவூர் நஸீர்-ISD)
மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவு மயிலவெட்டுவானை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை கருனாகரன் (49)என்பவரே நீரில் மூழ்கி மரணமடைந்தவராவார்
சம்பவ தினமான இன்று (05/01) காலை 08.00 மணியளவில் தனது 14 வயதுடைய மகனை அழைத்துக் கொண்டு வீட்டுத் தேவைக்கு விறகு சேகரிப்பதற்காக வீட்டுக்கு அருகாமையில் உள்ள மயிலவெட்டுவான் , வீரக்கட்டாறு ஆற்றைக் கடந்து மறுமுனைக்கு தோனியில் சென்று தந்தையும் மகனுமாக அருகிலுள்ள காட்டுக்குள் விறகுகளை சேகரித்து , தோளில் சுமந்து கொண்டு தோணியை நோக்கி நடந்து வரும் போது காட்டுக்குள்ளிருந்து திடீரென வந்த யானையொன்று இவர்களை துரத்த, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆற்றினுல் குதித்த போது மகன் நீந்தி கரைசேர இவர் களைப்பு காரணமாக தொடர்ந்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கி மரணித்துள்ளார்.
தந்தை நீரில் மூழ்கி காணாமல் போன விடயத்தை அவருடன் சென்றிருந்த 14 வயது மகன் வீடுவந்து தகவல் தெரிவித்த பின்னரே உறவினர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு ஆற்றினுல் முகம்குப்புற கிடந்த நிலையில் இவரது சடலத்தை இன்று பிற்பகல் 02.45 மணியளவில் கண்டெடுத்தனர்.
கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்.,உடற்கூற்று பரிசோதணைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் நாளை உறவினர்களிடம் பிரேதம் ஒப்படைக்கப்படும்.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துரையிடுக