ஹமாஸும் இஸ்ரேலும் யுத்தநிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன அமெரிக்க அதிபர் டொனால்ட் ட் ரம்ப் திங்களன்று (20) பதவியேற்க உள்ள நிலையில் அதற்கு முன்பதாக.!!

ஹமாஸும் இஸ்ரேலும் யுத்தநிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன

சுமார் 465 நாட்கள் தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் காஸாவில் யுத்த நிறுத்தம்

ஒரு வருடம் தாண்டிய ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தொடர் குண்டு தாக்குதல் மூலம் சுமார் 620000 அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் அங்கவீனமாக்கப்பட்டு, அனைத்து செல்வ வளங்களும் அழிக்கப்பட்டு 465 நாட்களை எட்டிய நிலையில் பலஸ்தீன மண்ணில் ஹமாஸும் இஸ்ரேலும் யுத்தநிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட் ரம்ப் எதிர்வரும் திங்களன்று (20) பதவியேற்க உள்ள நிலையில் அதற்கு முன்பதாக யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வருமாறு மிக கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தார்.


இந்நிலையில் இஸ்ரேலிய மொஸ்ஸாட் மற்றும் கட்டார் நாட்டின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பிடம் நேற்று(12) சமர்ப்பித்தனர்.


இதன்படி இன்று அல்லது நாளை பலஸ்தீனத்தில் நிரந்தர யுத்த நிறுத்த ஒப்பந்தத்துடன் கைதிகள் அனைவரையும் பரிமாறும் சந்தர்ப்பமும் ஏற்படுமென எதிர்பார்க்கலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்