ஹபரணை - மின்னேரிய வீதியில் மரண வீட்டிற்குச் சென்ற பஸ் விபத்து; 16 பேர் காயம்!

ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில்,  16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துமே புதன்கிழமை (29) பிற்பகல் 11 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளன.


இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும், ஹபரணை பிரேதச மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தனியார் பஸ், சிறிபுர பகுதியில் மரண வீடொன்றுக்கு கட்டுநாயக்கவிலிருந்து சென்று ​கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்