வடமாகாணத்தில் வெழுத்து வாங்க தயாராகும் மழை மேகங்கள்
காற்றழுத்த தாழ்வுமண்டலம் திரிகோணமலைக்கு நேர் கிழக்கே 80 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதுவரை வடக்கு வடமேற்கு என்ற திசையில் இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்டி பயணித்துள்ள நிகழ்வானது இன்று இரவுக்குள் வடக்கு வடமேற்கு என்ற கோணத்தில் சற்றே திசைமாறி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக அடுத்துவரும் 6 மணிநேரங்கள் தாழ்வு மண்டலத்தில் உருவாகும் அத்தனை மழைமேகங்களும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாக குவிக்கப்பட்டு பெருவெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது. காற்றின் வேகம் அவ்வப்போது மட்டும் மணிக்கு 50kmph என்ற அளவில் காணப்படும். காற்று அச்சம் வேண்டவே வேண்டாம்.
ஏற்கனவே கூறியதுபோன்று மதியத்துடன் மட்டக்களப்பு, அம்பாறையில் மழை ஓய்ந்திருக்கிறது. வடக்கில் இன்றிரவு முதல் மழையின் தீவிரம் குறையத்தொடங்குவதுடன் நாளை காலை மேகமூட்டத்துடனான வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாழ்வு மண்டலத்தின் மேலதிக நகர்வுப்பாதையை பொறுத்து வடக்கிற்கு மீண்டும் மழைவீழ்ச்சி கிடைக்குமா இல்லையா என்பது நாளை காலை அறிவிக்க முடியும்.

கருத்துரையிடுக