எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை .!!

எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்