விவசாயிகளுக்கான உரம் மானியம் அதிகரிப்பு ஜனாதிபதி அநுர பணிப்புரை.!

விவசாயிகளுக்கான உரம் மானியம் அதிகரிப்பு ஜனாதிபதி அநுர பணிப்புரை.!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் இதுவரை ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படும். இந்த மானியம் ஒக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறித்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்.

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்