முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைகளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களினால் தொடர்சியாக பாராளுமன்றத்திலும் அதிகாரமிக்க உயர் அதிகாரிகளிடமும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சம்பளம் அதிகரிப்பு தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கிழக்கு மாகான ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுனர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது.
இதில் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சமகால சவால்கள் தொடர்பாக கௌரவ ஆளுனரிடம் கௌரவ இம்ரான் மகரூப் அவர்களினால் விளக்கம் அளித்ததோடு முன்பள்ளி ஆசிரியர்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக எடுத்து கூறினர்.
இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கௌரவ ஆளுனர் இது தொடர்பாக ஆராய்ந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து
விரைவில் சம்பளத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.




கருத்துரையிடுக