முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் முயற்சியின் பலனாக சுகாதார அமைச்சினால் 124 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் "பாரிய இயன் மருத்துவ சிகிச்சை கட்டடத் தொகுதியின்" திறப்பு விழா இன்று இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இச் சிகிச்சை நிலையத்தின் மூலமாக நாளொன்றுக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அனைத்துவிதமான இயன் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்க முடிவதோடு , பின்வரும் சிகிச்சைகளுக்கான விஷேட கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.-Stroke Rehabilitation (Neurological Physiotherapy)
"பக்கவாத இயன் மருத்துவ சிகிச்சை "
-Orthopedic Physiotherapy
"எலும்பியல் இயன் மருத்துவ சிகிச்சை"
-Sports Physiotherapy and Rehabilitation
"விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான இயன் மருத்துவ சிகிச்சை"
-Geriatric Physiotherapy
"முதியோர்களுக்கான இயன் மருத்துவ சிகிச்சை"
-Pediatric Physiotherapy
"சிறுவர்களுக்கான இயன் மருத்துவ சிகிச்சை"
மேலும், கிழக்கு மாகாணத்தில் அரிதாக காணப்படும் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பின்வரும் அதி நவீன உபகரணங்களையும் இந் நிலையம் கொண்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
-Short Wave Therapy
-Shock Wave Therapy
-IR Therapy
-Wax Therapy
-Laser Therapy
-Ultrasound Therapy
-Traction Unit
-Combination Therapy
-Exercise Therapy
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரமும், பாராளுமன்ற உறுப்பினரின் அயராத முயற்சியுமே, கிழக்கு மாகாணத்தின் வரலாறு காணாத இப் பாரிய இயன் மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் நிர்மாணிக்கப்படுவதற்கும், குறித்த நிலையம் மூலம் ஏழை, எளிய மக்களும் விஷேடமாக விளையாட்டு வீரர்களும் நோய் நிலைமைகளில் இருந்து புனர்வாழ்வு பெறவுள்ளதற்கும் காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.








கருத்துரையிடுக