யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்