(எம்.எஸ்.எம். சஜீ - ஊடகப்பிரிவு)
பொருளாதார நெருக்கடி மற்றும் சிரமமான சூழ்நிலையிலும் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை தொடர்வதற்கு சகல இன மக்களும் ஆர்வம் செலுத்தும் இக்கால கட்டத்தில் இம்முறை ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றோம் என "ஈதுல்பித்ர்" நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவியரீதியில் பொருளாதார நெருக்கடிகளினால் நமது உறவுகளின் வாழ்வாதாரங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை சீர்செய்வதற்கு தேவையுடையோரை இனம்கண்டு அவர்களுக்கு உரிய முறையில் வசதி படைத்தவர்கள் ஸகாத், ஸதகா போன்ற தான தர்மங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் புனித றமழான் வலியுறுத்தி சென்றுள்ளது.
புனிதமிகு றமழான் காலங்களில் இரவிலும் பகலிலும் நாம் புரிந்த இறைவணக்கங்களையும் பிரார்த்தனைகளையும் எல்லாம் வல்ல அழ்ழாஹ் ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
குறிப்பாக இக்கால கட்டத்தில் பலஸ்தீனத்தில் நமது உம்மத்துகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதை நாமறிவோம், நாம் இங்கு சந்தோசமாக பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் அங்கு நமது உறவுகள் உண்ணுவதற்கு உணவின்றி தவிக்கின்றனர்.
எனவே அவர்களின் விடிவுக்காக நாமனைவரும் தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்
என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் நமது அனைத்து உறவுகளுக்கும் புனித நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஈத்-முபாரக்...!

கருத்துரையிடுக