தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி.!!

 அல்லாஹ்வின் அருள் நிறைய கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான ரமழானில்,


ஏ.எல்.எம். அதாஉல்லா  (பா .உ)
தலைவர் - தேசிய காங்கிரஸ்

நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் செறிந்து வாழும் முஸ்லிம் உடன்பிறப்புக்கள் நோன்பு நோற்று இராப்பகலாக நின்று வணங்கி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடியும் அல்லாஹ்வின் அருளை வேண்டியும் செயற்பட்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.!

அம்மக்கள் இன்று ஈதுல்பித்ர் ஈகைத்திருநாளைக் கொண்டாடி அல்லாஹ்வுக்கு சுக்ர்  செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும்
எனது உளம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.!
எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் புகழ்கின்றேன்.!

ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் பயிற்சியான நோன்பை வாழ்நாளின் அந்திம காலம் வரைக்கும் கடைப்பிடிப்பதில்தான்,
மானிடத்தின் வெற்றியும் தங்கி உள்ளது. ஏனையோரின் பசி,வலி, பட்டினி,வறுமைகளால் ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளும் புனித நோன்பின் இலட்சியங்கள், சகோதர வாஞ்சைக்கே வழிகாட்டுகிறது.
நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் , பிரார்த்திப்பதோடு ,  நாட்டின் பொருளாதார  நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் மக்களின் எண்ணம் போல் ஈடேற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டும் , எல்லாம் வல்ல இறைவனை இந் நன்நாளில் பிரார்த்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்