கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் மைத்ரி பதவிகளுக்கு புதிய நியமனங்கள்.‼️

கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் மைத்ரி.!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்த சிலர் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவும், அதன் செயற்குழுவினால் சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக கே.பி. குணவர்தனவும் பொருளாளராக ஹெக்டர் பெத்கமேவும் சிரேஷ்ட பிரதித் தலைவராக சரத் ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்