ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச் செய்த ஆளுநருக்கு ஆளும் தரப்பின் முஷாரப் MP நன்றி தெரிவிப்பு.!!

 

ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச் செய்த ஆளுநருக்கு ஆளும் தரப்பின் முஷாரப் MP நன்றி தெரிவிப்பு.

(எஸ்.எம்.அறூஸ்)

அண்மையில் வெளியான ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் உள்ள அம்பாரை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் உள்ள அம்பாரை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களை கடந்த இரண்டு தினங்களாக சந்தித்து தமது இடமாற்றங்களை இரத்துச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் நியாயமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற பொழுது அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது இன்னும் மறுபரிசீலனைக்கும் மேலதிக ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் எனவும்..

அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் மூப்பு நோய் போக்குவரத்து பிரச்சனைகள் போன்ற காரணிகளைச் சுட்டிக்காட்டி அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களை அம்பாறை மாவட்டத்திற்கு உள்ளேயே நியமிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் அவர்களால் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் நேற்றும் இன்று காலையிலும் கலந்துரையாடியிருந்தார்.

இதற்கமைவாக, அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை அம்பாறை மாவட்டத்திற்குள்ளேயே பொருத்தமான இடங்களில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களிடம் உறுதியளித்தார்.

இந்த துரித நடவடிக்கைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான் அவர்களுக்கு தனது பிரத்தியேக நன்றியையும் வாழ்த்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, தமது இடமாற்றங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களுக்கு தமது நன்றியையும்,வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்