பன்னி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பன்றி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில்
சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பழனி வடிவேல் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பன்னி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக