அலி சாஹிர் மௌலானா MP இன் ஏற்பாட்டில் வீட்டு திருத்தம் மற்றும் மலசல கூடங்கள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

அலி சாஹிர் மௌலானா MP இன் ஏற்பாட்டில் வீட்டு திருத்தம் மற்றும் மலசல கூடங்கள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

(உமர் அறபாத் -ஏறாவூர் )

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் விடுத்த  விஷேட கோரிக்கையை அடுத்து கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக வீடுகளை திருத்தம் செய்வதற்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதியும் , மலசல கூட அமைப்பிற்கு நாற்பதாயிரம் ரூபாய் நிதியும் மாணிய அடிப்படையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லையில் உள்ள பயனாளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா இனால் வழங்கி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண வீடமைப்பு திணைக்கள தலைவர் இஸ்மாயில் ரனுஸ் இன் பங்கேற்புடன் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த காசோலை கையளிப்பு நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் நலீம் , வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த செயற்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா அவர்களின் ஏற்பாட்டில் வீட்டு திருத்தப் பணி மற்றும் மலசல கூடம் அமைப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு முதற்கட்ட நிதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரனூஸ் அவர்களது துரித அர்ப்பணிப்பு நிறைந்த பணிகளை  நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பாராட்டி கௌரவித்தார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்