யாழ் கிளிநொச்சி A9 வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஆனையிறவு பகுதியில் வைத்து எருமைமட்டுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த ஹையஸ் ரக வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஹஏஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் பலத்தகாயமடைந்துள்ளனர்.
ஆனையிறவு பகுதியில் இன்று (2024.01.24) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்ட நிலையில் எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக