( நூருல் ஹுதா உமர் )
திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தாமோதரம்பிள்ளை சதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இப் பாடசாலையானது 1985 உள்நாட்டு கலவர காலப்பகுதி அதனைத்தொடர்ந்து யுத்த காலப்பகுதியிலும் பாதிப்புக்கு உள்ளான பாடசாலையாகும். தற்போழுதும் இவ் மண்டபத்தின் மேல் தோற்றமானது சிதைவடைந்து மழை காலங்களில் மழைநீர் வடிகின்றது. இக் காலங்களில் மாணவர்களின் எந்த ஒரு நிகழ்வுகளும், பாடசாலையில் எனைய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் முடியாதுள்ளது.
மேலும் எமது பாடசாலையில் கல்வி செயற்ப்பாட்டினை எடுத்துக்கொண்டால் சாதாரண தரத்திற்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடத்திற்கான ஆசிரியர்கள் இது வரையும் இல்லாமல் காணப்படுகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் பிரத்தியோக ஆரியர்களைக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
சென்ற 2022 இல் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் தொற்றி இருந்தனர் 11 மாணவர்களும் விஞ்ஞான பாடத்தில் 100'/' சித்தியினையும் கணித பாடத்தில் 9 மாணவர்கள் A தர சித்தினையும் பெற்று முதூர் கல்வி வலயத்தில் முதற்தர பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றது. எனவும் அதிபர் இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.




கருத்துரையிடுக