தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் - முரளிக்கு மனோ எச்சரிக்கை.!!

தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் - முரளிக்கு மனோ எச்சரிக்கை.!!

உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள்” தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நோக்கி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவர உள்ள திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட "ட்ரெய்லரில்" பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன்.  கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.  நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது தெரியும்.

அந்த இடத்தில் "நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்" என்று போடுங்கள். சரியாக வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்