மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் நண்பர்களுடன் நீராடுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மதியவேளை சென்ற இவர்கள் ஆழமான பகுதியை நோக்கிச் சென்றதால் மீளமுடியாமல் நீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், 16 வயதுடைய சிறுவன் நேற்று மாலை சடலமாகவே மீட்கப்பட்டபோதும் மற்றையவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போயிருந்த மற்றையவரை இன்று (03) காலை சடலமாக மீட்க கிடைத்தது.
ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துரையிடுக