திருமணமானவர்கள் தயவுசெய்து இந்த பதிவை படிக்க தவறாதீர்கள்

திருமணமானவர்கள் தயவுசெய்து இந்த பதிவை படிக்க தவறாதீர்கள்.


💟பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...


💟மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம்  சேயாகு..


💟இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு...


💟இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே ,  உறவுதனைத் தவிர்த்திடு..


💟சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்...


💟அவள் கர்ப்பம் சுமைக்கையில் 

நீ அவளைச் சுமந்திடு...


💟விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..


💟உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே...


💟தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்...


💟தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்...


💟வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..


💟சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்.


💟எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..


💟நோயிலே அவள் வீழ்ந்தால்  பாயாகி விடு.


💟நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு.


💟உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..


💟வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்.


💟வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்.


💟அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை...அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை.


💟அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி.


💟தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு.


💟சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்