எமது நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை கையாள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிவதற்கான ஆலோசனை செயலமர்வானது இறக்காமம் பிரதேச சபையில் UNDP அணுசரனையில் பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இன்று 2022.09.29 ஆம் திகதி வியாழக் கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கௌரவ தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு கமல் நித்மினி பிரதம அதிதியாகவும் செயலமர்வின் சிறப்பு வளவாளராகவும் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி பாஹிமா மற்றும் நிர்மலா Asia Foundation செயற்திட்ட உத்தியோகத்தர் ஏ.ஜவாஹிர் ஆகியோர் கலந்துகொண்டார்.
01. உள்ளுர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல்
02. உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
03. உள்ளுாராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல்
மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால நெருக்கடி நிலையில் இருந்து மீளும் வகையில் அதற்கு பங்களிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் அல்லது திட்டங்களின் பட்டியலை, பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இனம்காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை தெரிவு செய்யப்பட்ட துறைசார் திட்டமிடல் குழுவுடன் இணைந்து முன்னுரிமைப்படுத்தல் மற்றும் சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளுர் மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் ( LDSP ) கீழ் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நிதி நவம்பர் 2022 மாதப் பகுதில் " உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் (LDSP Project) கீழ் 14-35 மில்லியன் ரூபாய் வரையான நிதியை இறக்காமம் பிரதேச சபை பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டப் போட்டியில் இறக்காமம் பிரதேச சபை அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களில் 100 புள்ளிகளைப் பெற்ற 05 சபைகளுள் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டு 17 மில்லியன் ரூபாவினை பரிசாகப் பெற்று அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இச்செயலமர்வில், கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி Dr. எம்.ஐ.எம். நிஜாமுடீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் ஆகியோர் உட்பட அம்பாரை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், துறைசார் நிபுனர்கள் மற்றும் சனசமூக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
முழுநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படும் 14 வேலைத்திட்டங்களுக்கு உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டம்" (LDSP Project) இன் நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப் படவுள்ளது.












கருத்துரையிடுக