இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை நாகூரான் ஹாஜியார் உயிரிழப்பு.!!

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை நாகூரான் ஹாஜியார் உயிரிழப்பு

இன்று (07.11.2025) காலை 5.30 மணியளவில், காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கிச்சென்ற BJB 9540 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் பனிச்சங்கேணி பாடசாலைக்கு முன்னால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகூரான் ஹாஜியார் என்பவர் மரணமடைந்துள்ளதுடன், ஜனாஷாவினை வாகரை வைத்தியசாலையிலிருந்து அல் கிம்மா நிறுவனத்தின் வாகன உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கல்குடா அனர்த்த அவசர சேவையினர்  மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த காத்தான்குடியைச்சேர்ந்த மற்றொருவர் தற்போது வாகரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் வாகரைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்