பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கி சென்ற ஜஸ்சிங் கேக்கில் பல்லி இறந்த நிலையில்.

பிறந்தநாள் வைபவத்திற்கு  வாங்கி சென்ற ஜஸ்சிங் கேக்கில் பல்லி இறந்த நிலையில். இரு குழந்தைகள் வைத்தியசாலையில்..-  மஸ்கெலியா

மஸ்கெலியா நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் விற்பனைக்கு வைக்க பட்டு இருந்த வோன்டர் சுப்பர்  ஸ்டார் நிறுவனத்தின் ஜஸ்சிங் கேக்கை வாங்கி சென்ற மஸ்கெலியா புரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் கண்ணதாசன் சாலினி தம்பதியர்களின் பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேற்று 26.10.2026 ல் வெட்டி பிள்ளைகள் சாப்பிட்ட பிறகு பார்த்த போது ஜஸ்சிங் கேக்கில் உட் பகுதியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு 

பீதி அடைந்த நிலையில் 5 வயது உடைய ஜனசீகா என்ற பெண் குழந்தையும் 03 வயது உடைய ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு புகார் செய்ததை தொடர்ந்து பொது சுகாதார அதிகாரிகள் சம்பவம் நடந்த வெதுப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்