SLMC தேசியப்பட்டியல் எம்.பி - எம்.எஸ்.எம். நளீம் இன்று ராஜினாமா செய்கிறார்.!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசியப்பட்டியல் எம்.பி - எம்.எஸ்.எம். நளீம் இன்று ராஜினாமா செய்கிறார்.

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த தகவலை அறிவித்துள்ளார்.

நளீம் ஆற்றிய உரை 

முதலில் இறைவனை நன்றியுடன் புகழ்ந்தவனாக.

என்னை நம்பி கட்சியின் தலைமையால் ஒப்படைக்கப்பட்ட ஒரு தேசிய ரீதியான மக்கள் பிரதிநிதி எனும் பொறுப்பினை எனக்கு அங்கீகாரம் வழங்கிய எனது மண்ணின் மக்களுக்கும் , கட்சிக்கும் மீள சமர்ப்பணம் செய்த ஒரு வரலாற்று பெருமையை இந்த உயரிய சபையில் நிறைவேற்றிய ஒருவனாக!

தன் பதவியை தக்க வைக்கவும் , தன்னை நிலை நிறுத்தவும் வைக்கப்பட்ட விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காற்றிலே பறக்க விட்டு  , அற்ப சலுகைகளை எதிர்பார்த்து கட்சிக்கும் , பிறந்த மண்ணுக்கும் , தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் தலை குனிவை உண்டாக்கி சென்றோர் வரிசையில் நானும் சேராது எடுத்த அமானிதத்தை சொற்ப காலம் என்றாலும் அதனை  சரிவர நிறைவேற்றிய மக்கள் பிரதிநிதியாக தலை நிமிர்ந்து இந்த உயரிய சபையில் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.

பதவி ,பணம் ,அற்ப சலுகைகள் என்பன இறைவனை அஞ்சும் ஒரு உறுதியான அரசியல் கொள்கையும் ,நேர்மையும் ஊழல் ,சுரண்டல் அற்ற தெளிவான பாதையை கொண்டவனுக்கு தேவையற்ற ஒன்றாகும் என்பதை வாக்களித்த எனது மாவட்ட மக்களுக்கு , தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு சிறந்த கீர்த்தி மிகு செய்தியை இந்த ராஜினாமா ஊடாக சொல்லி இருக்கிறேன் , 

அரசியல் பதவிகளில் கிடைக்கும் ஊதியம் சலுகைகள் என்பன என்னை வாக்களித்து அங்கீகரித்த மக்களுக்கு உரித்தான ஒன்றாகும் அதனை துளியும் எனக்காக பாவிக்காமல் அந்த சம்பளத்தை மக்களுக்கு வழங்கும் நடைமுறையை 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியாக பின்னர் ஏறாவூர் நகர சபை தவிசாளராக இருந்து  முன்னெடுத்து வந்ததுடன் நான் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் நடைமுறைப்படுத்தி இருக்கிறேன்.

இறைவனுக்கு நன்றி செலுத்தும் அதே வேளை என்னை நம்பிய கட்சிக்கும் , தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் , அதற்காக பாடுபட்ட என் அத்தனை கள செயற்பாட்டு உறவுகளுக்கும் , நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், உங்களால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை குறுகிய காலம் என்றாலும் சிறப்பாக மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காகவும் சமூக நலன் கருதிய முன்னெடுப்புக்களுக்காவும் சிறப்பாக பயன்படுத்தி உள்ளேன் என்ற ஆத்ம திருப்தியுடன் விடைபெற்று கொள்கிறேன்- 

இப்புனித நாளில் யாரும் களங்கம் சொல்லி விடும் அளவு இல்லாத ஒரு பயணத்தை முன்னெடுத்த ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னில் சரி கண்டால் உங்கள் பிரார்த்தனைகளில் என்னை இணைத்து கொள்ளுங்கள் - 

இறைவன் அனைவருக்கும் அருள் புரிவாயாக என்றும் மக்களுக்கான பணியில் 

M.S. நளீம் - 

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் , 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்