காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் இன்று திடீர் விஜய்.!!

காங்கேசன்துறை சீமெந்து  தொழிற்சாலைக்கு  அமைச்சர்கள் இன்று திடீர் விஜய்.


கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காங்கேசன்துறை சீமெந்து  தொழிற்சாலைக்கு இன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட அமைச்சர்கள் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் தோழர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் இப்பயணத்தில் பங்கேற்றனர்.

1950 களில்  ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலை போர் காரணமாக 1990 களில் மூடப்பட்டது.

தற்போது இயங்காநிலையில் காணப்படும் சீமெந்து தொழிற்சாலையை, சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ளன. அவை தொடர்பில் ஆராயப்பட்டன.

சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் தீர்மானம் எட்டப்படும்.

இதன்போது, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் மற்றும் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்