அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட் அவர்களின் வெற்றிக்கு உழைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு கே.ஆர்.எம். றிசாட் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று (15) சனிக்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த இவர்கள் அக் கட்சியில் பெருத்தமான வேட்பாளர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அக் கட்சியினால் வீரமுனை வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட் அவர்களை வெற்றி பெற செய்வதற்கு தன்னுடைய முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

இவ் இணைவு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரான ஏ.நசார் தலைமையிலான குழுவினர் வீரமுனை வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட் அவர்களை வெற்றிக்காக இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னால் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், எம்.ஐ.எம். உவைஸ் (ஸ்டார்), வீரமுனை வட்டார வேட்பாளர் எம்.ஏ.சி. உவைஸ், எம்.யூ.எம். றுமைஸ், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்